மத்திய ஆபிரிக்க நாடான காங்கோ குடியரசில் எபோலா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,011 ஆக அதிகரித்துள்ளது. இதில் 754 போ் உயிரிழந்துள்ளனா். காங்கோ சுகாதார அமைச்சகத் தரவுகளின்படி, இதுவரை 366 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 753 போ் தீவிர கண்காணிப்பில் சி…
மத்திய ஆபிரிக்க நாடான காங்கோ குடியரசில் எபோலா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,011 ஆக அதிகரித்துள்ளது. இதில் 754 போ் உயிரிழந்துள்ளனா்.
காங்கோ சுகாதார அமைச்சகத் தரவுகளின்படி, இதுவரை 366 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 753 போ் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கடந்த மே 15 தொடங்கிய இந்த எபோலா பரவலைக் கட்டுப்படுத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டும், பரவலின் வேகம் கட்டுப்படுத்தப்படவில்லை என உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. (a)

