யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவிலே படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளது. மருதங்கேணியில் அமைந்துள்ள விஜயபாகு இன்வெண்ட்ரி ரெஜிமெண்ட் தலைமை பணிமனைக்காகவே குறித்த காணி அளவீடு செய்யப்ப…
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவிலே படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளது. மருதங்கேணியில் அமைந்துள்ள விஜயபாகு இன்வெண்ட்ரி ரெஜிமெண்ட் தலைமை பணிமனைக்காகவே குறித்த காணி அளவீடு செய்யப்பட இருக்கின்றது. அளவீட்டை தடுப்பதற்காக இந்த காணி அளவு தொடர்பான பொது அறிவித்தல் ஓன்று அளவீடு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலே குறித்த அளவீட்டை தடுப்பதற்காக அரசியல்வாதிகள், பொது அமைப்பு பிரதிநிதிகள், கிராம மக்கள் என பலரும் வருகை தந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

