தாம் வாழ்ந்த பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி வயாவிளான் மக்கள் போராட்டமொன்றை இன்று(2) ஆரம்பித்துள்ளனர். வயாவிளான் சந்தியில் குறித்த போராட்டம் இன்று முற்பகல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.வயாவிளான் மக்கள் 40 ஆண்டுகளாக இராணுவ ஆக்கிரமிப்பால் வெளியேறியிருந்த மக்கள் தமது வலிகளை சுமந்தவாறு ம…
தாம் வாழ்ந்த பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி வயாவிளான் மக்கள் போராட்டமொன்றை இன்று(2) ஆரம்பித்துள்ளனர்.
வயாவிளான் சந்தியில் குறித்த போராட்டம் இன்று முற்பகல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.வயாவிளான் மக்கள் 40 ஆண்டுகளாக இராணுவ ஆக்கிரமிப்பால் வெளியேறியிருந்த மக்கள் தமது வலிகளை சுமந்தவாறு முன்னெடுத்திருந்த இந்த போராட்டத்தில் அரசே! எங்கள் குடியிருப்புக்கள், விவசாய நிலங்கள், பாடசாலைகள், கோவில்கள், கைத்தொழில் நிலையங்கள் அனைத்தையும் எமக்கே தந்துவிடு என்ற வலுவான கோரிக்கையுடன் மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பேரளவில் திரண்டுவந்து தமக்கான நீதியை வலியுறுத்தி முன்னெடுத்த போராட்டத்தில் சமூக அமைப்புகள் அரசியல்வாதிகள் என பலதரப்பினரது பிரசன்னத்துடன் விவசாய நிலங்கள் பேசட்டும், சிதைந்துபோய் கிடக்கும் வீடுகளும் கல்விக் கூடங்களும் நாம் வாழ்ந்த வரலாற்றைச் சாட்சி சொல்லட்டும், எமது நிலங்கள் எமக்கு கிடைக்கப்பெற வேண்டும் என்ற கோசங்களுடன் போராட்டத்தை முன்னெடுத்திருந்ததனர். கடந்த காலங்களில் விடுவிக்க இணக்கம் தெரிவிக்கப்பட்ட காணிகளை இந்த அரசு உடன் விடுவிக்க வேண்டும் என்றும், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற கோரியே நாம் போராடுகின்றோமே தவிர எவருக்கும் எதிராக நாம் இந்த போராட்டத்தை முன்னெடுக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.












