சிறைச்சாலைகளுக்கு அரசாங்கமே பொறுப்பு எனவும் இதனால் கைதிகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். சிறைச்சாலைகளில் நெரிசல் காரணமாக பிரச்சினைகள் ஏற்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார். ஒரு கைத…
சிறைச்சாலைகளுக்கு அரசாங்கமே பொறுப்பு எனவும் இதனால் கைதிகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். சிறைச்சாலைகளில் நெரிசல் காரணமாக பிரச்சினைகள் ஏற்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார். ஒரு கைதி தடுத்து வைக்கப்பட வேண்டிய இடத்தில் நான்கு கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார். மஹர சிறைச்சாலையில் நேற்றைய தினம் இடம் பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் உரிய தகவல்கள் இன்னமும் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இந்த மோதல் சம்பவம் தொடர்பில் வருத்தத்தை வெளியிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சிறைச்சாலைகளுக்குள் கைதிகளுக்கு இடையிலோ அல்லது வேறு விதமான மோதல்கள் வெடிப்பது ஆரோக்கியமான விடயம் அல்ல என அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கம் தலையீடு செய்ய வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டி உள்ளார். இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பான பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.












