இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் 28 வயதான கோழிப்பண்ணை உரிமையாளர் ஒருவரை சிக்கவைத்து சிறையில் அடைக்க திட்டமிட்டு, அவரது மனைவி தனது கள்ளக்காதலனுடன் இணைந்து போதைப்பொருட்களை கூரியர் (courier) மூலம் அனுப்பியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.குறித்த இளைஞர் கோழிப்பண்ணை நடத்தி வருவதுடன்,…
இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் 28 வயதான கோழிப்பண்ணை உரிமையாளர் ஒருவரை சிக்கவைத்து சிறையில் அடைக்க திட்டமிட்டு, அவரது மனைவி தனது கள்ளக்காதலனுடன் இணைந்து போதைப்பொருட்களை கூரியர் (courier) மூலம் அனுப்பியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.குறித்த இளைஞர் கோழிப்பண்ணை நடத்தி வருவதுடன், அதே பகுதியில் இறைச்சிக் கடையொன்றையும் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு மாதமே ஆன நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.மேலதிக விசாரணை
சம்பவத்தன்று கான்பூரிலிருந்து அவரது முகவரிக்கு கூரியர் பார்சல் ஒன்று வந்துள்ளது. அதனைத் திறந்து பார்த்தபோது, சர்வதேச சந்தையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ளதாகக் கூறப்படும் சுமார் 4 கிலோ கொக்கைன், 80 கிராம் சரஸ் மற்றும் தடைசெய்யப்பட்ட மனநல மாத்திரைகள் உள்ளிட்ட போதைப்பொருட்கள் இருப்பது தெரியவந்துள்ளது.இதுகுறித்து பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, கந்தர்பால் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்சலை கைப்பற்றியதுடன், கோழிப்பண்ணை உரிமையாளரையும் விசாரணைக்கு உட்படுத்தினர்.
விசாரணையின்போது, தனக்கு பார்சலில் போதைப்பொருட்கள் இருப்பது குறித்து எதுவும் தெரியாது என அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவிலிருந்து தொலைபேசியில் தொடர்புகொண்ட ஒருவர், குறைந்த விலையில் கோழித் தீவனம் வழங்குவதாகவும், அதற்கான மாதிரிகளை அனுப்புவதாகவும் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார். இதனை நம்பியே பார்சலைப் பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது திருமணத்திற்கு முன்னரும் அதே தொலைபேசி இலக்கத்திலிருந்து அழைப்புகள் வந்ததாகவும், திருமணத்தை நிறுத்துமாறு தன்னை மிரட்டியதாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அவர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்வதற்குப் பதிலாக, பொலிஸார் அவரது மனைவியின் தொலைபேசி தொடர்பு விபரங்களை ஆய்வு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்போது, திருமணத்திற்கு முன்னரே அந்தப் பெண்ணுக்கும் ஸ்ரீநகரின் ஜைனகோட் பகுதியைச் சேர்ந்த 51 வயதான தாரிக் அகமது சோஃபி என்ற அரசு ஊழியருக்கும் தொடர்பு இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெற்றோரின் வற்புறுத்தலால் குறித்த பெண் கோழிப்பண்ணை உரிமையாளரை திருமணம் செய்துகொண்டதாகவும், திருமணத்திற்குப் பின்னரும் தாரிக் அகமதுவுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, கணவரை போதைப்பொருள் கடத்தல் போன்ற கடுமையான வழக்கில் சிக்கவைத்து நீண்ட காலம் சிறையில் அடைக்கச் செய்வதற்கு, குறித்த பெண்ணும் அவரது காதலனும் திட்டமிட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.போதைப்பொருட்கள்
இதற்காக தாரிக் அகமது, கான்பூரில் உள்ள தனது நண்பர் அரீப் என்பவரின் உதவியுடன் போதைப்பொருட்களைப் பெற்று, அவற்றை கோழித் தீவனம் எனக் கூறி பார்சல் மூலம் கணவரின் முகவரிக்கு அனுப்பியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பின்னர், பார்சலில் போதைப்பொருட்கள் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கி, கணவரை கையும் களவுமாக சிக்கவைக்க திட்டமிட்டிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் கோழிப்பண்ணை உரிமையாளரின் மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் தாரிக் அகமது சோஃபி ஆகிய இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் அரீப் சவுதி அரேபியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


-558887_850x460.jpg)









