கல்முனை வைத்தியசாலையில் பர்தா அணிந்து சென்ற பெண் என்பதற்காக அவரது மகனுக்கு சிகிச்சை வழங்க மறுக்கப்பட்டது என சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தி போலியானது என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.அத்தோடு, கல்முனை வைத்தியசாலை விவகாரத்தை வைத்து பல உள்ளக ரீதியான சூழ்ச்சிகள் இடம்பெற்ற…

கல்முனை வைத்தியசாலையில் பர்தா அணிந்து சென்ற பெண் என்பதற்காக அவரது மகனுக்கு சிகிச்சை வழங்க மறுக்கப்பட்டது என சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தி போலியானது என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.அத்தோடு, கல்முனை வைத்தியசாலை விவகாரத்தை வைத்து பல உள்ளக ரீதியான சூழ்ச்சிகள் இடம்பெற்று வருவதாக கூறப்படுகின்றது.மொட்டுக்கட்சியின் முக்கியஸ்தர்களுடன் தொடர்பில் இருக்கும் நபர் ஒருவரே இந்த வைத்தியசாலையில் குழப்பத்தை ஏற்படுத்தும் முக்கிய நபராக காணப்படுவதாக தெரியவந்துள்ளது.மேலும் ,கல்முனை வைத்தியசாலை விவகாரத்திலே அரசாங்கம் தலையிட்டு ஒரு சுமுகமான முடிவை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுகின்றது.கல்முனையில் வைத்தியர் Dr. சுகுணன் தொடர்ச்சியாக இலக்கு வைக்கப்படுகின்றமையும் ,வைத்தியசாலை ஊழியர்கள் குறித்து வெளியாகும் போலிச் செய்திகளும் வைத்தியசாலை சமூகத்தை பாதிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.இந்த சம்பவம் உண்மையில் சதியா, சூழ்ச்சியா அல்லது எதிர்பாராத விதமாக இடம்பெற்ற சம்பவமா, Dr. சுகுணனை விடாது துரத்தும் இந்த விவகாரத்தின் பின்னணி என்ன என்பது தொடர்பான விரிவாக தகவல்களை செய்திகளை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் காணலாம்.