கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் சிற்றூழியர்களின் உடை விவகாரம் தற்போது பெரும் பேசுபொருளாகியுள்ளது. இவ்விடயத்தை பூதாகரமாக்கி வைத்தியசாலைக்கு எதிராக இனரீதியான பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன. கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையில், சிற்றூழியர்க…
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் சிற்றூழியர்களின் உடை விவகாரம் தற்போது பெரும் பேசுபொருளாகியுள்ளது. இவ்விடயத்தை பூதாகரமாக்கி வைத்தியசாலைக்கு எதிராக இனரீதியான பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன. கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையில், சிற்றூழியர்களுக்கான சீருடை அணியாமல் மதசார்பு ஆடை அணிந்து புதிய நியமனம் பெற்றதாக 9 பேர் கடும் எதிர்ப்பினை எதிர்கொண்டு வருகின்றனர். அரச சுற்று நிரூபத்தின் அடிப்படையில் தாங்கள் சீருடைகளை அணிந்து வந்து வரும் நிலையில் சுகாதார அமைச்சினால் சிலர் நியமனங்களைப் பெற்று வைத்தியசாலைக்கு சீரூடையின்றி வந்து குழப்பத்தை ஏற்படுத்துவதாக பிற ஊழியர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். இந்நிலையில், இவ்விவகாரத்தில் வைத்தியர் சுகுணனுக்கு இருக்கும் தொடர்புகள் குறித்து பல தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவற்றை விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,












