களுத்துறை, ஹொரண - நாரகல பாலத்திற்கு அருகாமையிலுள்ள களு கங்கையில் நீராடுவதற்காகச் சென்ற மூன்று நண்பர்களில் ஒருவர், கங்கையில் குதித்து நீந்த முயன்றபோது பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகியுள்ளார். அவரைக் காப்பாற்ற முயன்ற மற்றொரு நண்பரும் நீரோட்டத்தில் சிக்கிப் போராட…

களுத்துறை, ஹொரண - நாரகல பாலத்திற்கு அருகாமையிலுள்ள களு கங்கையில் நீராடுவதற்காகச் சென்ற மூன்று நண்பர்களில் ஒருவர், கங்கையில் குதித்து நீந்த முயன்றபோது பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகியுள்ளார்.

அவரைக் காப்பாற்ற முயன்ற மற்றொரு நண்பரும் நீரோட்டத்தில் சிக்கிப் போராடிப் பின்னர் கரையேறியுள்ளார்.

இந்த விபத்தில் காணாமல்போனவர் யால பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.முதலைகளின் நடமாட்டம் அதிகம்

ஹொரண பொலிஸாருக்குத் வழங்கப்பட்ட தகவலை அடுத்து, பொலிஸ் கடற்படைப் பிரிவின் உயிர்காப்புப் படையினர் களு கங்கையில் மாயமான இளைஞரைத் தேடும் பணியை முன்னெடுத்து வருகின்றனர். குறிப்பிட்ட பகுதி கடுமையான நீரோட்டம் கொண்டதுடன் முதலைகளின் நடமாட்டமும் அதிகமுள்ள பகுதியாகும் என்பதால், அச்சமடைந்த உள்ளூர் மக்களும் மாயமான இளைஞரின் நண்பர்களும் நேற்றிரவு முழுவதும் கங்கைக் கரையில் தீ மூட்டி காத்திருந்துள்ளனர்.

ஹொரண பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.