களுத்துறை ஹொரணை, நாரகல பாலத்திற்கு அருகில் களு கங்கையில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்களில் நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞனைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இன்று (01) காலை பொலிஸ் கடற்படைப் பிரிவின் உயிர் பாதுகாப்பு குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்படவுள…

களுத்துறை ஹொரணை, நாரகல பாலத்திற்கு அருகில் களு கங்கையில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்களில் நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞனைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இன்று (01) காலை பொலிஸ் கடற்படைப் பிரிவின் உயிர் பாதுகாப்பு குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.நண்பர்கள் மூவரில் 19 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைஇவ்வாறு காணாமல் போனவர் யால பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய சிராத் சஸ்மித என்ற இளைஞராவார்.

நேற்று (31) மாலை 7.30 மணியளவில் நீராடுவதற்காக இந்த இடத்திற்கு வந்த மூன்று இளைஞர்களில் ஒருவர் ஆற்றில் குதித்து நீந்த முயன்ற போது, பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இதன்போது, அவரைப் காப்பாற்றுவதற்காக மற்றொரு இளைஞரும் ஆற்றில் குதித்துள்ளார்.

காப்பாற்றச் சென்ற நபரும் நீரோட்டத்தில் சிக்கிய போதிலும், அவர் கடும் போராட்டத்திற்குப் பிறகு கரை சேர்ந்துள்ளார்.

பின்னர் இது குறித்து ஹொரணை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

களு கங்கையின் நீரோட்டம் அதிகமாக உள்ள பகுதியாக இது விளங்குவதால், இன்று (01) காலை பொலிஸ் கடற்படைப் பிரிவின் உயிர் பாதுகாப்பு குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

மேலும், அந்தப் பகுதியில் முதலைகளின் நடமாட்டம் காணப்படுவதால், கரையோரத்தில் தீ மூட்டிப் பாதுகாப்பைப் பலப்படுத்தப் பிரதேசவாசிகளும் அவரது நண்பர்களும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.