ஜனாதிபதி செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) திட்டத்தின் ஒரு பகுதியாக, மாணவர்களின் கல்வி மற்றும் அறிவு வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் நன்னோக்கில், விசேட புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் இனிதே நடைபெற்றது. களுத்துறை மாவட்டம், அகலவத்தை பகுத…

ஜனாதிபதி செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) திட்டத்தின் ஒரு பகுதியாக, மாணவர்களின் கல்வி மற்றும் அறிவு வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் நன்னோக்கில், விசேட புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் இனிதே நடைபெற்றது.

களுத்துறை மாவட்டம், அகலவத்தை பகுதியில் அமைந்துள்ள ‘டார்டன்பீல்ட் கணபதி அறநெறிப் பாடசாலை’ நூலகத்தை மேம்படுத்தும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

‘கிளீன் ஸ்ரீலங்கா’ செயலகத்தின் பணிப்பாளர் திருமதி ஆர். எம். தர்ஷனா ரணசிங்க  இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் எதிர்காலக் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும் வகையிலும் பல மதிப்புமிக்க புத்தகங்களை கணபதி அறநெறிப் பாடசாலை நூலகத்திடம் அவர் முறைப்படி வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கணபதி அறநெறிப் பாடசாலையின் நிறுவனர் ச. உதயசாந்தன், அகலவத்தை பிரதேச செயலகத்தின் உயர் அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் எனப் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மாணவர்களின் அறிவொளியைப் பெருக்கும் இந்த உயரிய நன்முயற்சியை முன்னெடுத்த ஜனாதிபதி செயலகத்திற்கும், இந்நிகழ்வைச் சிறப்பாக ஒருங்கிணைத்த ‘கிளீன் ஸ்ரீலங்கா’ செயலக அதிகாரிகளுக்கும் கணபதி அறநெறிப் பாடசாலை நிர்வாகத்தினரும், ஆசிரியர்களும், மாணவர்களும் தங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்.