கனடாவில் கட்டுப்பாட்டை மீறி பரவி வரும் காட்டுத்தீயின் புகை அமெரிக்காவின் வடக்கு மாநிலங்களை கடுமையாக பாதித்துள்ள நிலையில், கனடா மீது புதிய வர்த்தக வரிகளை விதிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். “மாசுபட்ட காற்றால் அமெரிக்கா பாதிக்கப்பட்டுள்ளது. காடுகளை…
கனடாவில் கட்டுப்பாட்டை மீறி பரவி வரும் காட்டுத்தீயின் புகை அமெரிக்காவின் வடக்கு மாநிலங்களை கடுமையாக பாதித்துள்ள நிலையில், கனடா மீது புதிய வர்த்தக வரிகளை விதிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
“மாசுபட்ட காற்றால் அமெரிக்கா பாதிக்கப்பட்டுள்ளது. காடுகளை சரியாக பராமரிக்காததே இதற்குக் காரணம்” என டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதற்கு பதிலளித்த ஒன்டாரியோ முதல்வர் டக் போர்ட், “குற்றச்சாட்டுகளை விடுங்கள்; காட்டுத்தீயை அணைக்க உதவிகளை அனுப்புங்கள். அமெரிக்கா பேரிடர்களை எதிர்கொண்டபோது கனடாவும் உதவியது” என்று தெரிவித்துள்ளார்.

