பொலிஸ் அனுமதிப் பிரிவின் கணினிமயமாக்கப்பட்ட அமைப்பில் ஏற்பட்ட எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறைத் தொடர்ந்து, பொலிஸ் அனுமதி அறிக்கை விண்ணப்பங்களுக்காக இலங்கை பொலிஸ் ஒரு தற்காலிக நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. பத்தரமுல்லையில் இசுஹுருபாய கட்டிடத்தின் 17ஆவது மாடியில் அமைந்துள்ள பொல…
பொலிஸ் அனுமதிப் பிரிவின் கணினிமயமாக்கப்பட்ட அமைப்பில் ஏற்பட்ட எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறைத் தொடர்ந்து, பொலிஸ் அனுமதி அறிக்கை விண்ணப்பங்களுக்காக இலங்கை பொலிஸ் ஒரு தற்காலிக நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
பத்தரமுல்லையில் இசுஹுருபாய கட்டிடத்தின் 17ஆவது மாடியில் அமைந்துள்ள பொலிஸ் அனுமதிப் பிரிவால் இயக்கப்படும் இந்த அமைப்பு, நேற்று(20.08.2026) நண்பகல் முதல் செயலிழந்துள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவிண்ணப்பங்களைச் செயலாக்குவதற்கும், பின்னணி அறிக்கைகளைப் பெறுவதற்கும், பொலிஸ் அனுமதிச் சான்றிதழ்களை அச்சிடுவதற்கும் இந்த அமைப்பு பயன்படுத்தப்படுகிறது.
தொழில்நுட்பக் குழுக்கள் அமைப்பைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், விண்ணப்பதாரர்கள் தற்காலிக விண்ணப்ப முறையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
விண்ணப்பதாரர்கள், இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ இணையதளமான www.police.lkஇற்குச் சென்று, “விண்ணப்பத்தைப் பதிவிறக்கு” என்பதைத் தேர்ந்தெடுத்து, உரிய படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, விண்ணப்பதாரரின் தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டின் நகல்களுடன் சேர்த்து, clear.application@police.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.பூர்த்தி செய்யப்பட்ட சான்றிதழ்கள் இந்த ஆரம்பக் கட்டத்தில் விண்ணப்பதாரர்கள் எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை என்று பொலிஸ் தெரிவித்துள்ளது.
இருப்பினும், கணினிமயமாக்கப்பட்ட அமைப்பு மீண்டும் செயல்படத் தொடங்கியவுடன், தற்காலிக நடைமுறையைப் பயன்படுத்திய விண்ணப்பதாரர்கள் அனைவரும், தங்களது விண்ணப்பங்களை மீண்டும் இணையவழி மூலமாகச் சமர்ப்பித்து, வழக்கமான நடைமுறையின்படி உரிய கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.
இதற்கிடையில், கணினி அமைப்பு செயலிழப்பதற்கு முன்னர் தமது ஆவணங்களைச் சமர்ப்பித்த விண்ணப்பதாரர்கள், தமது சான்றிதழ்கள் பெற்றுக்கொள்வதற்குத் தயாராக உள்ளதா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட சான்றிதழ்களின் குறிப்பு எண்கள்(reference numbers) உத்தியோகபூர்வ இலங்கை பொலிஸ் இணையதளத்தில் வெளியிடப்படும்.
குறிப்பு எண்கள் வெளியிடப்பட்ட விண்ணப்பதாரர்கள், இசுஹுருபாய கட்டிடத்தின் 17ஆவது மாடியில் தங்களது பொலிஸ் அனுமதிச் சான்றிதழ்களை நேரில் பெற்றுக்கொள்ளலாம். ஒரு சிறப்பு ஏற்பாடாக, சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இச்சான்றிதழ்கள் வழங்கப்படும்.குறிப்பு எண்கள் வெளியிடப்படாத விண்ணப்பதாரர்கள், கணினிமயமாக்கப்பட்ட அமைப்பு முழுமையாக மீட்டமைக்கப்பட்ட பிறகு தங்களது அறிக்கைகளைப் பெறுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.












