கொழும்பு துறைமுகத்தில் உள்ள கொள்கலன் ஒன்றிலிருந்து போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அங்கிருந்து கைப்பற்றப்பட்ட ‘ஐஸ்’ (ICE) வகை போதைப்பொருளின் அளவு 420 கிலோகிராம் எனப் பொலிஸார் தெரிவித்தனர…

கொழும்பு துறைமுகத்தில் உள்ள கொள்கலன் ஒன்றிலிருந்து போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அங்கிருந்து கைப்பற்றப்பட்ட ‘ஐஸ்’ (ICE) வகை போதைப்பொருளின் அளவு 420 கிலோகிராம் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நீதிமன்ற உத்தரவைப் பெற்று மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, குறித்த கொள்கலனில் மறைத்து வைத்து பாகிஸ்தானில் இருந்து இந்தப் போதைப்பொருள் தொகை இலங்கை கொண்டுவரப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.