கம்பஹா, பமுனுகம - எபாமுல்ல கடற்கரைப் பகுதியில் கடலில் குளித்துக் கொண்டிருந்தவர்களில் நால்வர் காணாமல் போயுள்ளனர். பெண், இரண்டு சிறுமிகள் மற்றும் சிறுவன் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பமுனுபுகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு காணாமல் போனவர்கள் 35 வயதுடைய பெண்ணொருவர், 4 வயதுட…

கம்பஹா, பமுனுகம - எபாமுல்ல கடற்கரைப் பகுதியில் கடலில் குளித்துக் கொண்டிருந்தவர்களில் நால்வர் காணாமல் போயுள்ளனர். பெண், இரண்டு சிறுமிகள் மற்றும் சிறுவன் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பமுனுபுகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு காணாமல் போனவர்கள் 35 வயதுடைய பெண்ணொருவர், 4 வயதுடைய இரண்டு சிறுமிகள் மற்றும் 12 வயதுடைய சிறுவன் என தெரியவந்துள்ளது.பொலிஸார் மேலதிக விசாரணைகுறித்த நால்வரும் ஜா-எல பிரதேசத்தில் வசிப்பவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து கூட்டு நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளனர். பமுனுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.