கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட நேற்று (30) முதல் அட்மிரல் நிலைக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளார். கடந்த 2024 டிசம்பர் 31ஆம் திகதி இலங்கை கடற்படையின் 26ஆவது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டிருந்தார். அட்மி…

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட நேற்று (30) முதல் அட்மிரல் நிலைக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

கடந்த 2024 டிசம்பர் 31ஆம் திகதி இலங்கை கடற்படையின் 26ஆவது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டிருந்தார். அட்மிரலாக நியமனம் இந்நிலையில் தற்போது கடற்படை மரபின்படி உயரிய பதவியான அட்மிரல் தர நிலைக்கு அவர் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் ஆயுதப் படைகளின் பிரதம தளகர்த்தருமான அனுர குமார திசாநாயக்கவால் காஞ்சன பானகொடவுக்கான அட்மிரல் நிலை பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கடற்படைத் தளபதிக்கு வழங்கப்படும் பாரம்பரிய சிறப்பு மரியாதை அணிவகுப்பு இன்று கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.