நாட்டை சுற்றியுள்ள கடற்பகுதிகளில் நிலவும் வானிலை நிலவரங்களை கருத்திற்கொண்டு, வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.கற்பிட்டியிலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான மற்றும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பகுதிகளுக்கு எச்சரிக்கை விடு…

நாட்டை சுற்றியுள்ள கடற்பகுதிகளில் நிலவும் வானிலை நிலவரங்களை கருத்திற்கொண்டு, வளிமண்டலவியல் திணைக்களம்  எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.கற்பிட்டியிலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான மற்றும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அறிவுறுத்தல்

இதற்கமைய, கற்பிட்டியிலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான மற்றும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்கரைக்கு அப்பாலுள்ள கடற்பகுதிகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.குறித்த கடற்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

எனவே, இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறும், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இது தொடர்பாக விடுக்கப்படும் அடுத்தடுத்த அறிவிப்புகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும் கடற்றொழில் மற்றும் கடற்சார் சமூகத்தினர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.