கதிர்காம திருவிழா: வாகன நிறுத்துமிடங்களை அறிய புதிய இணையத்தளம் அறிமுகம் வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join கதிர்காம ருஹுணு மகா கதிர்காம தேவாலயத்தின் 2026 எசல பெரஹெரா திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் போக்குவரத்து வசதியை மே…
கதிர்காம திருவிழா: வாகன நிறுத்துமிடங்களை அறிய புதிய இணையத்தளம் அறிமுகம்
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
💬 Join
கதிர்காம ருஹுணு மகா கதிர்காம தேவாலயத்தின் 2026 எசல பெரஹெரா திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில் இலங்கை பொலிஸாரின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு புதிய இணையத்தளமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜூலை 15 முதல் 30 ஆம் திகதி வரை நடைபெறும் திருவிழா காலத்தில், கதிர்காம நகரிலுள்ள வாகன நிறுத்துமிடங்களின் நிகழ்நேர தகவல்களை இந்த இணையத்தளம் வழங்குகிறது.
இதன் மூலம் அருகிலுள்ள காலியாக உள்ள வாகன நிறுத்துமிடங்களை பக்தர்கள் எளிதில் கண்டறிய முடியும். மேலும், Google Maps ஊடாக போக்குவரத்து நெரிசல் குறைந்த பாதைகளைக் காட்டுவதுடன், வாகன நிறுத்துமிடங்களுக்கு செல்லும் திசை வழிகாட்டுதல்களும் வழங்கப்படுகின்றன.
அத்துடன், அவசரநிலைகளில் பயன்படுத்தக்கூடிய அவசர சேவை மையங்களின் இருப்பிடங்கள் மற்றும் தொடர்பு இலக்கங்களும் Google Maps இணைப்புடன் இந்த தளத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
கதிர்காம பகுதியில் திருவிழா காலத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பொதுமக்களின் சிரமத்தைத் தணிப்பதே இந்த இணையத்தளத்தின் நோக்கம் என இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த இணையத்தளத்தை www.perahera.police.lk என்ற முகவரியில் அணுக முடியும்.

