மறைந்த கட்டார் நாட்டின் முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானிக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்று (14) பிற்பகல் கட்டார் நோக்கிப் புறப்பட்டுச் சென்றார். இந்த விஜயத்தின் போது, முன்னாள் அமீரின் மறைவு குறித்து இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள…

மறைந்த கட்டார் நாட்டின் முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானிக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்று (14) பிற்பகல் கட்டார் நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.

இந்த விஜயத்தின் போது, முன்னாள் அமீரின் மறைவு குறித்து இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக பிரதமர் தனது உத்தியோகபூர்வ இரங்கலைத் தெரிவிக்கவுள்ளார்.நட்புறவு

மேலும், இந்த விஜயமானது இலங்கை மற்றும் கட்டார் நாடுகளுக்கு இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் ஒரு சந்தர்ப்பமாகவும் கருதப்படுகிறது.

அத்துடன், எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில பாராளுமன்ற உறுப்பினர்களும் அந்த இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக அதே விமானத்தில் தோஹா நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL-217 என்ற விமானத்தின் மூலம் இன்று இரவு 6.50 மணிக்கு கட்டுநாயக்கவிலிருந்து தோஹா நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.