கட்டார் நாட்டின் முன்னாள் அமீரின் மறைவைத் தொடர்ந்து, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக இரங்கல் தெரிவிப்பதற்காக கட்டாருக்குச் சென்றிருந்த பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (16.07.2026) நாடு திரும்பியுள்ளார்.பிரதமர் ஹரிணி லுசைல் அரண்மனையில் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியைச்…
கட்டார் நாட்டின் முன்னாள் அமீரின் மறைவைத் தொடர்ந்து, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக இரங்கல் தெரிவிப்பதற்காக கட்டாருக்குச் சென்றிருந்த பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (16.07.2026) நாடு திரும்பியுள்ளார்.பிரதமர் ஹரிணி லுசைல் அரண்மனையில் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியைச் சந்தித்து, அரச குடும்ப உறுப்பினர்களுக்குத் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.அரச குடும்பத்தின் பிற உறுப்பினர்கள்மேலும் அவர், காலஞ்சென்ற அமீரின் மகள்களான ஷேக்கா அல் மயஸ்ஸா பின்த் ஹமத் அல் தானி மற்றும் ஷேக்கா ஹிந்த் பின்த் ஹமத் அல் தானி ஆகியோருக்கும், அத்துடன் அரச குடும்பத்தின் பிற உறுப்பினர்களுக்கும் தனது இரங்கலைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் கட்டார் நாட்டின் சமூக மேம்பாடு மற்றும் குடும்ப விவகாரங்கள் அமைச்சர் புதைனா பின்ட் அலி அல் ஜபர் அல் நுஜைமியும் கலந்துகொண்டிருந்ததுடன், அவரிடமும் இலங்கை சார்பாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தனது இரங்கலைத் தெரிவித்தார்.

