கட்டாரின் முன்னாள் அமீரான ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானியின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தமது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.இரங்கல் செய்தி தனது 'X' தளம் மூலம் வெளியிட்ட ஒரு செய்தியில், மறைந்த ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி, கட்டாரிற்கு ஆற்றிய தொலைநோக்குப் பார்வை கொண்ட…

கட்டாரின் முன்னாள் அமீரான ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானியின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தமது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.இரங்கல் செய்தி

தனது 'X' தளம் மூலம் வெளியிட்ட ஒரு செய்தியில், மறைந்த ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி, கட்டாரிற்கு ஆற்றிய தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையையும் சேவையையும் மரியாதையுடன் நினைவு கூர்வதாக அவர் கூறினார்.Deeply saddened by the passing of His Highness Sheikh Hamad bin Khalifa Al Thani, Father Emir of Qatar.His visionary leadership and service to Qatar will be remembered.On behalf of the Government and people of Sri Lanka, I extend heartfelt condolences to HH Sheikh Tamim bin…— Anura Kumara Dissanayake (@anuradisanayake) July 12, 2026 இலங்கை அரசாங்கம் மற்றும் ஒட்டுமொத்த இலங்கை மக்கள் சார்பாக, ஜனாதிபதி, கட்டாரின் தற்போதைய அமீர், ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானிக்கும், அரச குடும்ப உறுப்பினர்களுக்கும் மற்றும் கட்டார் மக்களுக்கும் தமது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

கட்டாரில் மாற்றத்தை ஏற்படுத்திய ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி இன்று (12) காலமானார்.

அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, கத்தார் நாட்டின் மிக உயர்ந்த அரச நிறுவனமான எமிரி திவான், நாட்டில் நான்கு நாட்கள் தேசிய துக்க காலத்தை அறிவித்துள்ளது.