வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join 6 கிலோ 180 கிராம் ‘குஷ்’ போதைப்பொருளை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை ப…

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

6 கிலோ 180 கிராம் ‘குஷ்’ போதைப்பொருளை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் விமான நிலைய பிரிவின் அதிகாரிகள் குழுவினால், கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 60 மில்லியன் ரூபாய் பெறுமதியான குறித்த போதைப்பொருளுடன் 63 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான பெண்ணிடம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் விமான நிலைய பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

இதேவேளை, நேற்று காலை தொம்பே, பரன்கொட பகுதியில் 9 கிலோ 128 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையின் போது, 03 மனித எதிர்ப்பு கண்ணிவெடிகள், அவற்றின் 03 பியூஸ் பாகங்கள், M16 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 20 தோட்டாக்கள், 05 வாள்கள், மின்னணு தராசு ஒன்று மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.