கட்டுநாயக்காவில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட விமானத்தில் பறவை மோதிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று காலை கட்டுநாயக்காவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரை நோக்கிப் புறப்பட்ட A330 ரக பயணிகள் விமானத்திலேயே இவ்வாறு பறவை ஒன்று மோதியுள்ளது. இதன் காரணமா…
கட்டுநாயக்காவில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட விமானத்தில் பறவை மோதிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று காலை கட்டுநாயக்காவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரை நோக்கிப் புறப்பட்ட A330 ரக பயணிகள் விமானத்திலேயே இவ்வாறு பறவை ஒன்று மோதியுள்ளது.
இதன் காரணமாக, அந்த விமானம் தற்போது சிலாபம் வான்பரப்பில் மிகவும் தாழ்வாகப் பறந்து வட்டமடித்துள்ளது. மீண்டும் தரையிறக்கம் அத்துடன் எரிபொருளை குறைத்து, பாதுகாப்பாக விமானம் தரையிறங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

