கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை : ஒரு லட்சம் ரூபா அபராதம் விதிப்பு வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join -அம்பாறை நிருபர்- அரசாங்கம் நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலையை மீறி இறக்குமதி செய்யப்பட்ட பால் பொன்னி அரிசியை விற்பன…
கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை : ஒரு லட்சம் ரூபா அபராதம் விதிப்பு
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
💬 Join
-அம்பாறை நிருபர்-
அரசாங்கம் நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலையை மீறி இறக்குமதி செய்யப்பட்ட பால் பொன்னி அரிசியை விற்பனை செய்த குற்றச்சாட்டில், அக்கரைப்பற்று மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் இயங்கிவரும் வர்த்தக நிலையம் ஒன்றிற்கு 100,000 ரூபா அபராதம் விதித்து அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையின்போது, 2 கிலோகிராம் இறக்குமதி செய்யப்பட்ட பால் பொன்னி அரிசி, அரசாங்கம் நிர்ணயித்திருந்த கிலோ ஒன்றிற்கான 255 ரூபா என்ற கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தமை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.
இதன்போது சம்மந்தப்பட்ட வர்த்தக நிலையத்திற்கு 100,000 ரூபா அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

