கேகாலை, கரவனெல்ல பொதுப் பேருந்து நிலையத்தின் பெண்கள் கழிவறையில் புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குழந்தையைப் பிரசவித்த பின்னர், அதனை கைவிட்டுச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் 30 வயதுடைய பெண்ணொருவரை பொதுமக்கள் நேற்று நண்பகல் பிடித்துள்ளனர். குறித்த…

கேகாலை, கரவனெல்ல பொதுப் பேருந்து நிலையத்தின் பெண்கள் கழிவறையில் புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குழந்தையைப் பிரசவித்த பின்னர், அதனை கைவிட்டுச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் 30 வயதுடைய பெண்ணொருவரை பொதுமக்கள் நேற்று நண்பகல் பிடித்துள்ளனர்.

குறித்த பெண் நேற்றைய தினமே குழந்தையைப் பிரசவித்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பிரசவித்த குழந்தையை கழிவறையில் இருந்த நீர்த் தொட்டிக்குள் வைத்துவிட்டு அங்கிருந்து செல்ல குறித்த பெண் முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தை அவதானித்த பொதுமக்கள் உடனடியாக பெண்ணைத் தடுத்து நிறுத்தியதுடன், குழந்தையையும் அவரையும் கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குழந்தை தற்போது நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.