கேகாலை சாஹிரா முஸ்லிம் வித்தியாலயத்திற்கு புதிய மூன்று மாடி கட்டிடம் கேகாலை சாஹிரா முஸ்லிம் வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடி கட்டிடத் தொகுதி கடந்த (20 ஆம் திகதி) மாணவர் பாவனைக்காக உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. இதற்காக அரசாங்கத்தினால் செலவிடப்பட்ட மொத…

கேகாலை சாஹிரா முஸ்லிம் வித்தியாலயத்திற்கு புதிய மூன்று மாடி கட்டிடம்

கேகாலை சாஹிரா முஸ்லிம் வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடி கட்டிடத் தொகுதி கடந்த (20 ஆம் திகதி) மாணவர் பாவனைக்காக உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. இதற்காக அரசாங்கத்தினால் செலவிடப்பட்ட மொத்தத் தொகை 300 இலட்சம் (30 மில்லியன்) ரூபாவாகும்.கடந்த 2012 ஆம் ஆண்டில் இக்கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், அவை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாமல் இடைநிறுத்தப்பட்டிருந்தன. பின்னர், 2025 ஆம் ஆண்டில் இதன் கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன.