உயிரிழந்த நபருக்கு உணவு கட்​ட​ணம் வசூலித்​த​ மருத்துவமனைக்கு ரூ.65.62 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. மறைந்த கேப்டன் விஜயகாந் நடித்த திரைப்படம் ஒன்றில் உயிரிழந்தவருக்கு மருத்துவம் பார்த்து மருத்துவமனை பெரும் தொகை பணத்தை கோரிய காட்சி ஒன்று இர…

உயிரிழந்த நபருக்கு உணவு கட்​ட​ணம் வசூலித்​த​ மருத்துவமனைக்கு ரூ.65.62 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

மறைந்த கேப்டன் விஜயகாந் நடித்த திரைப்படம் ஒன்றில் உயிரிழந்தவருக்கு மருத்துவம் பார்த்து மருத்துவமனை பெரும் தொகை பணத்தை கோரிய காட்சி ஒன்று இருக்கும். அதேபோல உயிரிழந்த நபருக்கு உணவு கட்​ட​ணம் வசூலித்​த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,கோமா நிலை​யில் சிகிச்சை கோமா நிலை​யில் சிகிச்சை

கோமா நிலை​யில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி உயி​ரிழந்த பிறகும், அவருக்கு உணவு மற்​றும் பராமரிப்பு வழங்​கிய​தாகக் கூறி கூடு​தல் கட்​ட​ணம் வசூலித்​த​தாக தொடரப்​பட்ட வழக்​கில், சென்னை வடபழனி​யில் செயல்​படும் தனியார் மருத்​து​வ​மனைக்கு ரூ.65 லட்​சத்து 62 ஆயிரத்து 500 அபராதம் விதித்து செங்​கல்​பட்டு மாவட்ட நுகர்​வோர் குறைதீர் ஆணை​யம் தீர்ப்​பளித்​தது.

சென்னை மாடம்​பாக்​கத்​தைச் சேர்ந்த கோபால​கிருஷ்ணன், தனது தாய் சுசிலாவை 2003-ம் ஆண்டு பிப்​ர​வரி 5-ம் தேதி சிகிச்​சைக்​காக மருத்​து​வ​மனை​யில் சேர்த்​திருந்​தார்.

சிகிச்சை பலனின்றி பிப். 9-ம் தேதி அதி​காலை 2.30 மணி​யள​வில் சுசிலா உயி​ரிழந்​தார். ஆனால் காலை 10.30 மணிவரை உடலை ஒப்​படைக்​காத மருத்​து​வ​மனை நிர்​வாகம், அந்த இடைப்​பட்ட நேரத்​தில் உணவு மற்​றும் பராமரிப்பு வழங்​கிய​தாகக் கூறி கூடு​தலாக வசூலித்​த​தாக புகார் எழுந்​தது. இது தொடர்​பாக கோபால கிருஷ்ணன் தொடர்ந்த வழக்​கில், ‘ரூ.61,644 கூடு​தலாக வசூலித்​திருப்​ப​தாக மருத்​து​வ​மனை தரப்பே நீதி​மன்​றத்​தில் ஒப்​புக்​கொண்​டு, அந்​தத் தொகையை திருப்​பிச் செலுத்​து​வ​தாக தெரி​வித்​தும் இது​வரை வழங்​க​வில்​லை’ எனக் கூறப்​பட்​டது.

வழக்கை விசா​ரித்த செங்​கல்​பட்டு மாவட்ட நுகர்​வோர் குறைதீர் ஆணை​யத் தலை​வர் காசி பாண்​டியன், மருத்​து​வ​மனைக்கு ரூ.65.62 லட்​சம் அபராதம் விதித்​ததுடன், கூடு​தலாக வசூலித்த ரூ.61,644-ஐ மனு​தா​ரருக்கு வழங்​கவும் உத்தரவிட்டார்.