பிரபல போதைப்பொருள் வர்த்தகராகக் கருதப்படும் ‘கிராண்ட்பாஸ் லொக்கு நோனா’ என்பவரின் போதைப்பொருள் வர்த்தகம் மூலம் ஈட்டியதாகச் சந்தேகிக்கப்படும், சுமார் 600 மில்லியன் ரூபாய் (6 கோடி ரூபாய்) பெறுமதியான சொத்துக்களை, சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் புதன்கிழமை (08) அன…
பிரபல போதைப்பொருள் வர்த்தகராகக் கருதப்படும் ‘கிராண்ட்பாஸ் லொக்கு நோனா’ என்பவரின் போதைப்பொருள் வர்த்தகம் மூலம் ஈட்டியதாகச் சந்தேகிக்கப்படும், சுமார் 600 மில்லியன் ரூபாய் (6 கோடி ரூபாய்) பெறுமதியான சொத்துக்களை, சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் புதன்கிழமை (08) அன்று முடக்கியுள்ளனர்.
சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகம் மூலம் ஈட்டியதாகச் சந்தேகிக்கப்படும் பணத்தைப் பயன்படுத்தி கொள்வனவு செய்யப்பட்ட, 570 மில்லியன் ரூபாவிற்கும் (5.7 கோடி ரூபாய்) அதிகமான பெறுமதியுடைய இரண்டு சொத்துக்களை, ஏழு நாட்களுக்கு முடக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபருக்குக் கிடைத்த முறைப்பாட்டிற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், உஸ்வெட்டகெய்யாவப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர், சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகம் மூலம் ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தி சொத்துக்களையும் உடைமைகளையும் வாங்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

