ஆக்கங்கள் 25 September 2025 கிறிஸ்மஸ் திருவிழாவிற்கு தயாராகும் நுவரெலியா நகரம் ஆக்கங்கள் 25 September 2025 வரும் கிறிஸ்மஸ் காலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக நுவரெலியாவில் ஒரு விசேட திருவிழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கிறிஸ்மஸ் காலத்தில் நுவரெலியாவ…
ஆக்கங்கள்
25 September 2025
கிறிஸ்மஸ் திருவிழாவிற்கு தயாராகும் நுவரெலியா நகரம்
ஆக்கங்கள்
25 September 2025
வரும் கிறிஸ்மஸ் காலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக நுவரெலியாவில் ஒரு விசேட திருவிழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கிறிஸ்மஸ் காலத்தில் நுவரெலியாவை கவர்ச்சிகரமான சுற்றுலா தலமாக மாற்றும் நோக்கில், நுவரெலியா வணிக சபை ஊடாக, நுவரெலியா மாவட்ட செயலகம், நுவரெலியா மாநகர சபை மற்றும் நுவரெலியா கூட்டு வர்த்தக அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து இத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
இது குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று கடந்த 22 ஆம் திகதி நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இந்த திருவிழாவில் உள்நாட்டு உணவு, பானங்கள், கைவினைப்பொருட்கள் கண்காட்சிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான கடைகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.
இந்த நிகழ்வில் நுவரெலியா மாநகர சபையின் மேயர் உபாலி வணிகசேகர, நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன், நுவரெலியா மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்பிரியங்கர டி சில்வா மற்றும் நுவரெலியா வணிக சபையின் தலைவர் டக்ளஸ் நாணயக்கார ஆகியோர் கலந்து கொண்டனர்.
நுவரெலியா மாவட்ட ஊடகப் பிரிவு

