மலேசியா, இந்தோனேசியா, வியட்நாம், மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் இலங்கை நாட்டுக்கான தூதுவர்களுக்கும், கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவுக்கும் இடையிலான சந்திப்பொன்று திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. கிழக்கு மாகாணத்தில் உள்ள சுற்றுலாத் த…
மலேசியா, இந்தோனேசியா, வியட்நாம், மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் இலங்கை நாட்டுக்கான தூதுவர்களுக்கும், கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவுக்கும் இடையிலான சந்திப்பொன்று திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள சுற்றுலாத் துறையில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் கேள்விக்குட்பட்ட சுற்றுலாத் தளங்கள் குறித்து தூதுவர்களும் ஆளுநரும் விரிவாகக் கலந்துரையாடியுள்ளனர்.முதலீட்டு வாய்ப்புகள் குறிப்பாக, கிழக்கு மாகாணத்தின் கடலோரப் பகுதிகளில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா ஈர்ப்பு மையங்களாக அமையக்கூடிய இடங்களை இந்தத் தூதுக்குழு பார்வையிடத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதில் கிழக்கு மாகாணத்தின் பிரதம செயலாளர்கே.குணநாதன், கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

