கிழக்கு மாகாணத்தின் புதிய பிரதம செயலாளராக குமாரசிங்கம் குணநாதன், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமன கடிதத்தை, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, புதன்கிழமை (08) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவரிடம் கையளித்தார். இ…

கிழக்கு மாகாணத்தின் புதிய பிரதம செயலாளராக குமாரசிங்கம் குணநாதன், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமன கடிதத்தை, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, புதன்கிழமை (08) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவரிடம் கையளித்தார்.

இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான குமாரசிங்கம் குணநாதன், நீண்டகால நிர்வாக அனுபவம் கொண்டவர். இவர் முன்னதாகக் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளராகவும், குச்சவெளி, வெருகல் மற்றும் மண்முனை வடக்கு ஆகிய பிரதேச செயலகங்களில் பிரதேச செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.