கொலம்பியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இரண்டாவது நாளாக இன்றும்(11.08.2026) மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 164ஆக உயர்ந்துள்ளதாகவும், ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆகப் பதிவ…

கொலம்பியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இரண்டாவது நாளாக இன்றும்(11.08.2026) மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 164ஆக உயர்ந்துள்ளதாகவும், ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், நாட்டின் பல நகரங்களில் பாரிய சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கமைய, பெரைரா மற்றும் காலி ஆகிய முக்கிய நகரங்களில் பல மாடி கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளதுடன், மணிசாலேஸ் நகரிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தேவாலயத்தின் கோபுரம் ஒன்றும் கடுமையாகச் சேதமடைந்துள்ளது.

நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் காலி நகரில் மட்டும் குறைந்தது 85 பேர் உயிரிழந்துள்ளதுடன், அங்குள்ள பிரதான வைத்தியசாலை ஒன்றின் மேல் தளங்கள் இடிந்து வீழ்ந்ததால் நோயாளிகள் வீதிகளில் வைக்கப்பட்டுச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியுள்ளதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகின்றது.

மீட்புப் பணிகளில் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.

கொள்ளைச் சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டும், பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டும் காலி மற்றும் பெரைரா ஆகிய நகரங்களில் இரவு நேர ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், மேலதிகப் பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.