தெமட்டகொடை - பேலியகொடை பிரதான வீதியின் கிராண்ட்பாஸ் பகுதியில் கொள்கலன் லொறியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் அந்த வீதியூடான இரு வழிப் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்து காரணமாக வாகனங்கள் மாற்று வீதிக்கு திருப்பிடப்பட்டுள்ளதாக ப…
தெமட்டகொடை - பேலியகொடை பிரதான வீதியின் கிராண்ட்பாஸ் பகுதியில் கொள்கலன் லொறியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனால் அந்த வீதியூடான இரு வழிப் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்து காரணமாக வாகனங்கள் மாற்று வீதிக்கு திருப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் குறித்த வீதி ஊடான போக்குவரத்தை வழமைக்கு கொண்டு வரும் பணிகள் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

