கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட 463 கிலோகிராம் 'ஐஸ்' போதை பொருள் இலங்கையை இலக்கு வைத்தே கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும். பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்குத் துவாய்களுக்கு நடுவே மறைத்து இவை கொண்டுவரப்பட்டுள்ளன. இலங்கையில் இவற்றை வெளியிலெடுக்க முயன்ற…

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட 463 கிலோகிராம் 'ஐஸ்' போதை பொருள் இலங்கையை இலக்கு வைத்தே கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும். பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்குத் துவாய்களுக்கு நடுவே மறைத்து இவை கொண்டுவரப்பட்டுள்ளன. இலங்கையில் இவற்றை வெளியிலெடுக்க முயன்றபோது சுங்கப் பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரின் கடும் கண்காணிப்பு காரணமாக வெளியிலெடுக்க முடியாமல் போயிருக்கலாம். இதனால் பிடிபட்டுவிடுவோம் என்ற பயத்தில் அவசர அவசரமாக நிறுவனங்களின் பெயர்களை மாற்றி கெமரூன் நாட்டிற்கு மறு ஏற்றுமதி செய்வது போல ஆவணங்களைத் தயாரித்திருக்கலாம். எனவே இது பாகிஸ்தானிலிருந்து கெமரூன் செல்ல வந்த சரக்கு என்பதை நம்ப முடியாது. இது இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட போதைப்பொருளாகவே இருக்கக் கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.திடீரென மாற்றப்பட்ட திட்டங்கள்பாகிஸ்தானில் சமர்ப்பிக்கப்பட்ட மூல ஆவணங்களை பரிசீலித்தால் மட்டுமே இதன் பின்னணியில் உள்ள உண்மையான கடத்தல்காரர்கள் யார் என்பதைக் கண்டறிய முடியும். இன்னமும் இதன் எடையை அளவிடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. சுமார் 463 கிலோகிராம் எடைகொண்ட 46 பொதிகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் முழுமையாக அளவிட்ட பின்னரே இறுதி எடை தெரியவரும். எது எப்படியிருப்பினும்இ இது மிகவும் பாரதூரமான சம்பவமாகும். காரணம் கடந்த காலத்தில் கடல் வழியாக இலங்கைக்கு ஐஸ் மற்றும் ஹெரோயின் போன்ற போதைப்பொருட்கள் பெருமளவில் கொண்டுவரப்படுவது தீவிரமாகக் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அமெரிக்கா-ஈரான் பதற்றநிலை மற்றும் வெளிநாடுகளில் இருந்த முக்கிய குற்றவாளிகள் பலர் கைது செய்யப்பட்டமை போன்ற காரணங்களால் தெற்கு பகுதி ஊடாக இலங்கைக்குப் பெருமளவில் போதைப்பொருட்கள் வருவது நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் மீண்டும் பழையபடி கொள்கலன்கள் மூலமாக நாட்டிற்குள் போதைப்பொருள் வருகிறதா என்ற சந்தேகம் எழுந்தது. அதற்கமையவே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இந்த இரண்டு கொள்கலன்கள் குறித்து இரகசியத் தகவல் கிடைத்தது. பின்னர் கடந்த ஜூன் மாதமளவில் இந்தத் தகவல் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிற்கு வழங்கப்பட்டது. அதன்பின்னர் இந்த இரண்டு கொள்கலன்களும் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டிருந்தன. நீதிமன்ற உத்தரவைப் பெற்றே இவை திறக்கப்படவிருந்தன. நீதிமன்றத்திற்கு விபரங்கள் அறிக்கையிடப்பட்டு பௌர்ணமி தினத்தை ஒட்டிய காலப்பகுதியில் இவற்றைத் திறக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. இதனிடையே பொலிஸ் விசாரணைகளின் போது ஒருங்கிணைந்து செயல்படாமையின் விளைவுகளைச் சில நேரங்களில் சந்திக்க வேண்டியேற்படுகிறது. இந்த நிலையில் பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு மீண்டும் ஒரு தகவல் கிடைக்கிறது. அவர் உடனடியாகச் செயற்பட்டு சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்குத் தெரிவித்து நீதிமன்ற உத்தரவைப் பெற்று நேற்று இந்த இரண்டு கொள்கலன்களையும் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளார். ஆவணங்களைப் பரிசீலித்தபோது இந்தச் சரக்கு பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு வந்து இங்கிருந்து கெமரூன் (Cameroon) நாட்டிற்கு (மத்திய ஆப்பிரிக்க நாடு) மறு ஏற்றுமதி (Re-export) செய்யப்படவிருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தானிலிருந்து கெமரூன் செல்வதற்கு இலங்கையினூடாக இவ்வளவு நீண்ட தூரம் சுற்றி அனுப்ப வேண்டிய  அவசியம் என்ன? கெமரூன் நாட்டிற்கு தெற்காசியாவிலிருந்தா அல்லது பாகிஸ்தானிலிருந்தா ஐஸ் போதைப்பொருள் விநியோகிக்கப்படுகிறது? இது தொடர்பில் ஆராய்ந்து பார்த்தபோது கெமரூன் நாட்டிற்கு 'மெத்தாம்பெட்டமைன்' (ஐஸ்) போதைப்பொருள் முக்கியமாக அர்ஜென்டினா மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. மேலும் கெமரூன் நாட்டிற்குள் இருக்கும் இரசாயனக் கூடங்களிலேயே ஐஸ் தயாரிக்கப்படுவதாகவும் தெரியவருகிறது. குறிப்பாக கெமரூனில் ஐஸ் போதைப்பொருளை விட 'கொக்கைன்' பயன்பாடே அதிகம். அது கொலம்பியா - பெரு - பொலிவியா போன்ற நாடுகளிலிருந்து வருகிறது. ஆவணங்கள் தொடர்பான ஆழமான விசாரணையின் பொதே முழுமையான விபரங்களை பெற்றுக் கொள்ள முடியும்.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15