கொங்கோ ஜனநாயகக் குடியரசின் முவாண்டா பகுதியில் உள்ள அட்லாண்டிக் கடற்கரையில் சுமார் 12 தொன் எடையுள்ள பிரம்மாண்டமான இறந்த திமிங்கிலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. கரை ஒதுங்கிய இந்த இராட்சத திமிங்கிலத்தை அகற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர். ஆரம்பத்தில் டிராக்டர்கள் மற்றும்…
கொங்கோ ஜனநாயகக் குடியரசின் முவாண்டா பகுதியில் உள்ள அட்லாண்டிக் கடற்கரையில் சுமார் 12 தொன் எடையுள்ள பிரம்மாண்டமான இறந்த திமிங்கிலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
கரை ஒதுங்கிய இந்த இராட்சத திமிங்கிலத்தை அகற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.
ஆரம்பத்தில் டிராக்டர்கள் மற்றும் சாதாரண தூக்கு உபகரணங்களைப் பயன்படுத்தி திமிங்கிலத்தை நகர்த்த முயன்றனர்.
ஆனால், இரண்டு நாட்களாகத் தொடர்ந்த இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.கரை ஒதுங்கிய திமிங்கிலம் இதனைத் தொடர்ந்து, மீட்புக் குழுவினர் இறுதியாக 42 தொன் எடையைச் சுமக்கக்கூடிய ஒரு பிரம்மாண்டமான நவீன கிரேனை சம்பவ இடத்திற்குக் கொண்டு வந்தனர்.
அதன் பின்னரே பலத்த போராட்டத்திற்கு மத்தியில் அந்த இராட்சத திமிங்கிலத்தின் உடல் கடற்கரையில் இருந்து வெற்றிகரமாக மீட்கப்பட்டு அகற்றப்பட்டது.
இந்த அரிய மற்றும் பிரம்மாண்டமான மீட்புப் பணியைக் காண்பதற்காகக் கடற்கரையில் ஏராளமான பொதுமக்கள் திரண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

