சிலாபம் - கொழும்பு பிரதான வீதியின் கட்டுனேரிய, லன்சிகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளார். வாகன விபத்தை ஏற்படுத்தி தப்பிச்சென்ற டிப்பர் ரக லொறியையும், அதில் சூட்சுமமாக மறைந்திருந்த சாரதியையும், விபத்து இடம்பெற்று 48 மணிநேரத்திற்குள் பொலிஸார் கைது செய்துள்ளனர்.…
சிலாபம் - கொழும்பு பிரதான வீதியின் கட்டுனேரிய, லன்சிகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளார்.
வாகன விபத்தை ஏற்படுத்தி தப்பிச்சென்ற டிப்பர் ரக லொறியையும், அதில் சூட்சுமமாக மறைந்திருந்த சாரதியையும், விபத்து இடம்பெற்று 48 மணிநேரத்திற்குள் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
82 பாதுகாப்பு கமெராக்களை ஆய்வு செய்து முன்னெடுக்கப்பட்ட நீண்ட விசாரணையின் பின்னர், மாரவில தலைமையக பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் வவுனியாவில் வைத்து அவரை கைது செய்துள்ளனர். நேருக்கு நேர் மோதி விபத்துகடந்த 07 ஆம் திகதி இரவு 9.30 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்றும், விபத்தை ஏற்படுத்தி தப்பிச்சென்ற டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், அவருடன் பின்னால் பயணித்த அவரது தாயார் பலத்த காயங்களுடன் மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக சிகிச்சைக்காக ராகம போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். விபத்து இடம்பெற்றவுடன், டிப்பர் வாகனத்தை நிறுத்தாது அதன் சாரதி தப்பிச்சென்றுள்ளார்.
இந்த நிலையில், அந்த வாகனத்தை கைப்பற்ற விரிவான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டனர்.
சாரதி கைதுஇந்த விபத்தில் உயிரிழந்தவர் கட்டுனேரிய பகுதியில் வசித்து வந்த ரித்ம பெர்னாண்டோ என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் அந்த குடும்பத்தின் ஒரே ஆண் பிள்ளை என தெரியவந்துள்ளது.
அத்துடன், அவரது தந்தையும் சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் காயமடைந்து வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகின்றார்.
விபத்தை ஏற்படுத்திய டிப்பர் வாகனத்தின் இலக்கத் தகடுகளில் இலக்கங்கள் தெளிவாக இருக்கவில்லை. 82 பாதுகாப்பு கமெராக்களை நீண்ட நேரம் ஆய்வு செய்து, பல பிரதான வீதிகள் மற்றும் குறுக்கு வீதிகளில் பயணித்த பாதையை அவதானித்து, வவுனியாவில் மறைந்திருந்த சாரதியை கைது செய்துள்ளனர்.

