கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியில் இருந்த காலத்தில் அவருக்கு ஆலோசனை வழங்கிய அம்மையார் ஒருவர் இருந்தார். அவரை உங்களுக்கு நினைவிருக்கலாம். கோட்டாபயவின் அனைத்து செயல்பாடுகளும் அவரின் ஆலோசனைபடியே அமைந்திருந்தது. அமைச்சரவை நியமினம் - சிலரை பதவியில் நீக்கியமை அவர் சொற்படியே செய்தார…

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியில் இருந்த காலத்தில் அவருக்கு ஆலோசனை வழங்கிய அம்மையார் ஒருவர் இருந்தார். அவரை உங்களுக்கு நினைவிருக்கலாம். கோட்டாபயவின் அனைத்து செயல்பாடுகளும் அவரின் ஆலோசனைபடியே அமைந்திருந்தது. அமைச்சரவை நியமினம் - சிலரை பதவியில் நீக்கியமை அவர் சொற்படியே செய்தார். எப்படி உறங்குவது கூட அந்த அம்மையார் சொன்னபடியேதான். நாம் மேலே குறிப்பிட்ட அம்மையார் தான் அநுராதபுரத்தில் சோதிடம் பார்த்து பிரபலமான 'ஞானக்கா'.அவருக்கு சொந்தமான ஒரு சொகுசு ஹோட்டல் ஒன்று அநுராதபுரத்தில் நுவரவெவ குளத்தை நிரப்பி கட்டுப்பட்டுள்ளதாக றுவுணு பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலை விரிவுரையாளரும் ரிவிர பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் - இலங்கை புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் முன்னாள் ஊடக பணிப்பாளரான சந்தன காரியவசம் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் அவர் தெரிவித்த மேலதிக தகவல்கள்...சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டடங்கள்அந்த அம்மையார் ஹோட்டல் கட்டினால் உனக்கென்ன எங்களுக்கு என்ன என்று கேள்வி எழலாம் அல்லவா? ஆனால் 2300 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட நுவரவௌ குளத்தை அழித்துள்ளார்கள்.இது எங்களுடைய உரிமைச் சொத்து அதைத்தான் இவர்கள் நாசப்படுத்தியுள்ளனர். நுவரவெவ எல்லைப் பகுதியில்தான் இந்த ஹோட்டலின் பெரும்பாலான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இது முற்றிலும் சட்டவிரோதமான செயல் அப்படிச் செய்ய முடியாது. குளத்தின் எல்லைப் பகுதிக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர். ஒரு சாதாரண மனிதரால் இதைச் செய்ய முடியாது.நாட்டுத் தலைவரின் அரசியல் செல்வாக்கைக் கொண்டுதான் இவற்றை நிரப்பி இந்த நிலைக்குக் கட்டியிருக்கிறார்கள்.மேலும் கோட்டாபய ராஜபக்ச பணம் வழங்கியதாகவும் ஒரு கதையும் உள்ளது. இந்த அம்மையார் ஹோட்டல் கட்டினாரா அல்லது கோட்டாபயவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தாரா என்பது நமக்கு முக்கியமல்ல.ஆனால் இந்த விடயங்கள் இப்படி நடக்க முடியாது. கடந்த காலத்தில் குளத்தின் கரையோரங்களில் அல்லது குளத்திற்குள் கட்டப்பட்ட ஹோட்டல்களை அகற்றும் திட்டம் ஒன்று நடந்தது. அதற்கும் நிறைய பிரச்சினைகள் வந்தன.ஆனால் அநுராதபுரத்திலுள்ள இந்த ஹோட்டலுக்கு ஒன்றும் நடக்கவில்லை. அதனால் அதிகாரிகள் மற்றும் அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். இந்த ஹோட்டல் புதிதாக அமைக்கப்பட்ட கண்டி - அனுராதபுர வீதியில் இராணுவ மருத்துவப் படைப்பிரிவை கடந்து சில மீட்டர்கள் செல்லும் போது உள்ளது. அநுராதபுரத்தில் சோதிடம் பார்த்த சாதாரண ஒரு பெண் இப்போது கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு சொந்தக்காரராக இருப்பது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.