4 ஆண்டுகளுக்கு முன்பு, 3 இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் தென் கொரிய படகொன்றின் மாலுமியுடன் இணைந்து மஞ்சள் கடலில் தீப்பிடித்து விழுந்த விமானமொன்றில் இருந்து 2 விமானிகளை காப்பாற்றியுள்ளனர்.அவ்வாறு உயிரைக் காப்பாற்றிய 2 இலங்கையர்களுக்கு தேசிய நலனுக்கு ஆற்றிய சிறப்பான பங்களிப்பை காரண…

4 ஆண்டுகளுக்கு முன்பு, 3 இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் தென் கொரிய படகொன்றின் மாலுமியுடன் இணைந்து மஞ்சள் கடலில்  தீப்பிடித்து விழுந்த விமானமொன்றில் இருந்து 2 விமானிகளை காப்பாற்றியுள்ளனர்.அவ்வாறு உயிரைக் காப்பாற்றிய 2 இலங்கையர்களுக்கு தேசிய நலனுக்கு ஆற்றிய சிறப்பான பங்களிப்பை காரணம் காட்டி, அங்கு நீண்ட காலம் தங்குவதற்கான திறன்மிகு தொழிலாளர் விசாக்களை வழங்கியதாக அந்த நாட்டு நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. திறன்மிகு தொழிலாளர் தகுதி மூன்றாவது மீட்பாளர் ஏற்கனவே நீண்ட கால வதிவிடத் தகுதியைப் பெற்றிருப்பதுடன் 2022 ஆகஸ்ட் 12 அன்று, சியோலுக்குத் தெற்கே சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹ்வாசொங் கடற்கரைக்கு அப்பால் இந்த மீட்பு நடவடிக்கை நடைபெற்றுள்ளது. இயந்திரத்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து கீழே விழுந்த போர் விமானத்தின் விமானிகளை, கடற்றொழில் படகில் இருந்த இலங்கைத் தொழிலாளர்கள் கண்டுள்ளனர்.அந்த நேரத்தில், அந்த மூன்று பேரும் தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் துறைகளில் உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குப் பொதுவாக வழங்கப்படும் E-9 விசாக்களை வைத்துக்கொண்டு, வேலைவாய்ப்பு அனுமதி முறையின் கீழ் தென் கொரியாவில் இருந்துள்ளனர். இந்தத் தகுதி, தொழிலாளர்கள் அதிகபட்சமாக நான்கு ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் தங்குவதற்கு அனுமதி வழங்கும். வெள்ளிக்கிழமை அன்று E-7-4 திறன்மிகு தொழிலாளர் தகுதி வழங்கப்பட்ட அந்த இரு நபர்களும், ஆரம்பத்தில் இரண்டு ஆண்டுகள் வரை தென் கொரியாவில் தங்கியிருக்கலாம்.அதிகாரப்பூர்வ அங்கீகாரம்அதன் பிறகு, நீட்டிப்புகளின் எண்ணிக்கைக்கு வரம்பின்றி, அவர்களின் விசாக்களை இரண்டு ஆண்டு இடைவெளிகளில் புதுப்பித்துக் கொள்ளலாம். இதனையடுத்து "நமது சமூகத்திற்குச் சிறப்பான பங்களிப்புகளை ஆற்றியுள்ள வெளிநாட்டினர் நாட்டில் நிலையாக வாழ்வதற்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம்" என நீதித்துறை அமைச்சர் ஜங் சங்-ஹோ கூறியுள்ளார்.அந்த வீரர்களின் செயல்களுக்கு கிடைத்த மற்றொரு அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம், இரண்டு விமானிகளைக் காப்பாற்ற உதவியதற்காக, விமானப்படைத் தலைமைத் தளபதியிடமிருந்து அவர்கள் ஒரு பாராட்டுக் கடிதத்தைப் பெற்றுள்ளனர். 4 ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட அந்தத் தொழிலாளர்களின் செயல், இறுதியில் 2 உயிர்களை காப்பாற்றியது மட்டுமல்லாமல், தென் கொரியாவில் அவர்களின் வாழ்க்கைப் போக்கையும் மாற்றியமைத்துள்ளது.