இராஜதந்திர சேவைக்காலத்தை பூர்த்தி செய்து புறப்படவிருக்கும் இலங்கைக்கான கொரியத் தூதுவர் மியோன் லீ, நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவைச் சந்தித்தார். இலங்கைக்கும் கொரியாவிற்கும் இடையே நிலவும் நீண்டகால நட்புறவு மற்றும் புதிய வேலைத்தி…

இராஜதந்திர சேவைக்காலத்தை பூர்த்தி செய்து புறப்படவிருக்கும் இலங்கைக்கான கொரியத் தூதுவர் மியோன் லீ,  நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவைச் சந்தித்தார்.

இலங்கைக்கும் கொரியாவிற்கும் இடையே நிலவும் நீண்டகால நட்புறவு மற்றும் புதிய வேலைத்திட்டங்களுக்காக வழங்கிய பங்களிப்பை தாம் பாராட்டுவதாக கொரியத் தூதுவர் இதன்போது நினைவு கூர்ந்தார்.

புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு வேலைத்திட்டத்திற்கும் இலங்கையின் அபிவிருத்திக்காகவும் கொரிய அரசாங்கம் வழங்கிய பங்களிப்பு குறித்து ஜனாதிபதியின் செயலாளர் இதன்போது தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். (a)