கொழும்பு - கிராண்ட்பாஸ் பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரரான பெண் ஒருவரின் பெருந்தொகை சொத்துக்கள் மற்றும் வீடு என்பன சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப்பிரிவினரால் நேற்று (08 பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.கிராண்ட்பாஸ் லொகு நோனா என்ற சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரால், போதைப்பொரு…

கொழும்பு - கிராண்ட்பாஸ் பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரரான பெண் ஒருவரின் பெருந்தொகை சொத்துக்கள் மற்றும் வீடு என்பன சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப்பிரிவினரால் நேற்று (08 பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.கிராண்ட்பாஸ் லொகு நோனா என்ற சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரால், போதைப்பொருள் கடத்தல் மூலம் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல்

சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் மூலம் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பணத்தைப் பயன்படுத்தி வாங்கப்பட்டதாகக் கண்டறியப்பட்ட, 5.7 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களை ஏழு நாட்களுக்கு முடக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டினை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் மூலம் பெற்ற பணத்தைப் பயன்படுத்தி சொத்துக்களை வாங்கியுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.