கொழும்பு, அத்துருகிரிய, ஜயந்தி மாவத்தைக்கு அருகில் பேருந்தும் டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொடகம - பொரளை பிரதான வீதியில், அத்துருகிரிய கோவிந்தன மாவத்தைக்கு அர…

கொழும்பு, அத்துருகிரிய, ஜயந்தி மாவத்தைக்கு அருகில் பேருந்தும் டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொடகம - பொரளை பிரதான வீதியில், அத்துருகிரிய கோவிந்தன மாவத்தைக்கு அருகில், இன்று அதிகாலை 4.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.கோர விபத்து

தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும் டிப்பர் வாகனமும் மோதியமையே  விபத்திற்கு காரணமாகியுள்ளது.பேருந்தின் சாரதி, சுமார் ஒரு மணி நேரம் 45 நிமிட நீண்ட போராட்டத்திற்கு பின்னரே மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தினால் டிப்பர் வாகனமும் பேருந்தும் பலத்த சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்தைத் தொடர்ந்து, அந்த வீதியுடனான போக்குவரத்து சுமார் இரண்டு மணித்தியாலங்கள் முடங்கியிருந்தது.

இந்த விபத்து குறித்து அத்துருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.