கொழும்பு - குருந்துவத்தை, லிப்டன் சுற்றுச்சாலைக்கு அருகே தனியார் பேருந்தின் நடத்துனரை கைத்துப்பாக்கி போன்ற ஆயுதத்தை காட்டி மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்கள், ஒரு தனியார…
கொழும்பு - குருந்துவத்தை, லிப்டன் சுற்றுச்சாலைக்கு அருகே தனியார் பேருந்தின் நடத்துனரை கைத்துப்பாக்கி போன்ற ஆயுதத்தை காட்டி மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்கள், ஒரு தனியார் பல்கலைக்கழக மாணவி மற்றும் ஒரு மாலுமி ஆகியோர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வெளியான காரணம்
தனியார் பேருந்தின் பாதையை காரில் வந்த ஒரு கும்பல் மறித்து, நடத்துனரின் தலையில் கைத்துப்பாக்கி போன்ற ஆயுதத்தை காட்டி மிரட்டி காரில் தப்பிச்செல்வதாக 119 மையத்திற்கு வந்த அழைப்பினை தொடர்ந்து, கொழும்பு தெற்கு பிரிவு அதிகாரிகள், பொரள்ளை பொது மயானத்திற்கு அருகே சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் பல்கலைக்கழக மாணவியுடன் பயணித்த கார் மற்றும் இரண்டு கத்திகள், இரண்டு அடி நீளமுள்ள ஒரு சங்கிலி ஆகியவை பொலிஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதயைடுத்து கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் பயணித்த காரின் பாதையை பேருந்து மறித்தமையினால் மிரட்டல் விடுத்ததாக தெரியவந்துள்ளது.












