அரசாங்கத்தின் தேசிய வீட்டுவசதி திட்டத்திற்காக 44,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உப்பாலி பன்னிலகே தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்டம், கெஸ்பேவ பிரதேச செயலகப் பிரிவு, பெலவத்த மேற்கு கி…

அரசாங்கத்தின் தேசிய வீட்டுவசதி திட்டத்திற்காக 44,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உப்பாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டம், கெஸ்பேவ பிரதேச செயலகப் பிரிவு, பெலவத்த மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள வீடற்ற பயனாளி குடும்பத்திற்கு, "வசதியான வீடு - அபிவிருத்தி பெற்ற குடும்பம்" என்ற வீட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை வழங்கும் நிகழ்வில் இன்று (06) பங்கேற்றபோது அமைச்சர் இதனை கூறியுள்ளார்.குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீடுகள்

தேசிய வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு வீடற்ற 30,000 குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வீட்டுவசதி, அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, மற்றும் தோட்டப்பயிர்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு உள்ளிட்ட துறைசார்ந்த அமைச்சுகளின் கூட்டுத் திட்டமாக இந்த தேசிய வீட்டுவசதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, சமுர்த்தி மேம்பாட்டுத்துறையும் இந்த ஆண்டு 1,000 க்கும் மேற்பட்ட வீடுகளை பயனாளிகளுக்காக நிர்மாணிக்கும் என்றும் எதிர்பார்க்கின்றது.