கொழும்பின் பணவீக்கம் அதிகரிப்பு வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join இவ்வருடத்தின் ஜூன் மாதத்திற்கான கொழும்பு நகர் பிரதேசங்களின் மாதாந்த நுகர்வோர் பணவீக்க வீதம் 6.8% ஆக அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்…

கொழும்பின் பணவீக்கம் அதிகரிப்பு

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

இவ்வருடத்தின் ஜூன் மாதத்திற்கான கொழும்பு நகர் பிரதேசங்களின் மாதாந்த நுகர்வோர் பணவீக்க வீதம் 6.8% ஆக அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்திணைக்களம் வெளியிட்டுள்ள கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் படி, 2026 மே மாதத்தில் கொழும்பு நகர் பிரதேசங்களின் மாதாந்த நுகர்வோர் பணவீக்கம் 5.5% ஆகப் பதிவாகியிருந்தது.

2026 ஜூன் மாதத்தில் உணவுப் பிரிவின் வருடாந்த பணவீக்க வீதம் 3.6% ஆக அதிகரித்துள்ளதுடன், இது மே மாதத்தில் 0.9% ஆகப் பதிவாகியிருந்தது.

அதேபோல், உணவு அல்லாத பிரிவின் வருடாந்த பணவீக்க வீதமும் ஜூன் மாதத்தில் 8.4% ஆக அதிகரித்துள்ளது. இது 2026 மே மாதத்தில் 7.8% ஆகப் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.