கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பல பகுதிகளில் இன்று (03) இரவு முதல் 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் க…

கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பல பகுதிகளில் இன்று (03) இரவு முதல் 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, இன்று இரவு 8.00 மணி முதல் நாளை (04) இரவு 8.00 மணி வரை நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.நீர்வெட்டு இதன்படி, நுகேகொடை, கொஹுவலை, தெஹிவளை, கல்கிசை, ரத்மலானை, மொறட்டுவை, ராவதாவத்தை, சொய்சாபுரம், அங்குலானை, இதிபெத்த, கடுபெத்த, கல்தெமுல்ல, மோதறை, கொரளவெல்ல, எகொடஉயன மற்றும் கட்டுக்குருந்த ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும். மேலும், செத்சிறிபாய, ஹிம்புடான, உடுமுல்ல வீதி, மாளிகாகொடெல்ல, வங்கிச் சந்தி வீதி, டபிள்யூ.ஏ. சில்வா மாவத்தை, ஹவ்லொக் வீதி, கல்யாணி வீதி, கொழும்பு 06, வைத்தியசாலை வீதி, ஜெயந்தி மாவத்தை மற்றும் சாந்தி மாவத்தை ஆகிய பகுதிகளிலும் நீர்வெட்டு நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர் விநியோகம் தடைப்படுவதால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, நீர்வெட்டு நடைமுறையில் இருக்கும் காலப்பகுதியில் நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.