கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான போதைப்பொருள் தொகை ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. மத்திய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே இந்தப் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட போதைப்பொ…

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான போதைப்பொருள் தொகை ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே இந்தப் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் ‘ஐஸ்’ (ICE) எனப்படும் மெத்தம்பிட்டமைன் வகையைச் சேர்ந்ததாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கொள்கலனில் மறைத்து வைத்து இந்தப் போதைப்பொருள் கடத்தி வரப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.