கொழும்பின் பல இடங்களில் நடைபெறும் பல்வேறு விருந்துகளில் கலந்துகொள்ளும் இளைஞர், யுவதிகள் மத்தியில் இரகசியமாக போதை மாத்திரைகளை விநியோகிக்கப்பட்டு வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. இவ்வாறான நிகழ்வுகளின் போது போதை மாத்திரைகளை விநியோகிக்கும் இளம் கடத்தல்காரர் ஒருவர், 23,000…
கொழும்பின் பல இடங்களில் நடைபெறும் பல்வேறு விருந்துகளில் கலந்துகொள்ளும் இளைஞர், யுவதிகள் மத்தியில் இரகசியமாக போதை மாத்திரைகளை விநியோகிக்கப்பட்டு வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
இவ்வாறான நிகழ்வுகளின் போது போதை மாத்திரைகளை விநியோகிக்கும் இளம் கடத்தல்காரர் ஒருவர், 23,000 போதை மாத்திரைகள் மற்றும் ஹெரோயின் தொகையுடன் மாளிகாவத்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் நிஷாந்த டி சொய்சாவின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனை நடவடிக்கையின் போது 20 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.போதை மாத்திரை விநியோகம்கைதான இளைஞரிடமிருந்து கிடைத்த தகவல்களுக்கமைய, இந்த போதை மாத்திரைகளும் ஹெரோயினும் நாளாந்தம் இளைஞர், யுவதிகளுக்கு விநியோகிப்பதற்காக இரகசியமாக வரவழைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இசை நிகழ்ச்சிகளில் நடனமாடும் இளைஞர் யுவதிகளை இலக்காக கொண்டு இந்த வியாபாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போதை மாத்திரைகள் கொழும்பில் மட்டுமன்றி நாட்டின் பல மாகாணங்களுக்கும் விநியோகிப்பதற்காக கடத்தல்காரர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒரு போதை மாத்திரையின் மதிப்பு 100 ரூபாவாகும், எனினும் இக்கூட்டத்தினர் அந்தப் போதை மாத்திரைகளை 200 ரூபாவுக்கும் அதிகமான விலைக்கு விற்றுள்ளனர். இந்த போதை மாத்திரைகளுக்கு மேலதிகமாக, சந்தேக நபரிடமிருந்த சுமார் 800 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.











-558120_850x460.jpg)
-558122_850x460.jpg)