கொழும்புத் துறைமுகத்தில் உள்ள கொள்கலன் ஒன்றிலிருந்து 463 கிலோ கிராம் சந்தேகத்திற்குரிய கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன் (‘ஐஸ்’) கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இருவர் பாகிஸ்தான் நாட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்த…

கொழும்புத் துறைமுகத்தில் உள்ள கொள்கலன் ஒன்றிலிருந்து 463 கிலோ கிராம் சந்தேகத்திற்குரிய கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன் (‘ஐஸ்’) கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இருவர் பாகிஸ்தான் நாட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் (CCIB) அதிகாரிகளால் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்புத் துறைமுகத்தில் உள்ள கொள்கலன் ஒன்றில் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பெருமளவிலான சரக்குத் தொகுதி கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.