மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிரான்குளம் தர்மபுரம் கிராம மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டுவந்த குடிநீர்ப் பிரச்சினைக்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது. தர்மபுரம் கிராம மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்திடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாகஇ குறித்த பிரச்…
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிரான்குளம் தர்மபுரம் கிராம மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டுவந்த குடிநீர்ப் பிரச்சினைக்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது.
தர்மபுரம் கிராம மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்திடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாகஇ குறித்த பிரச்சினை அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரால் முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து மண்முனைப்பற்று பிரதேச சபையின் நிதியூடாக குடிநீர் வசதியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு மக்களின் நீண்டகாலத் தேவைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
இதன் ஆரம்பகட்டப் பணிகள் இன்று (01.09.2026) மண்முனைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் கா. செந்தில்குமார் அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் மண்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் தர்மபுரம் கிராம மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
நீண்டகாலமாக குடிநீருக்காக சிரமங்களை எதிர்கொண்டுவந்த தமது கிராமத்திற்கு தீர்வைப் பெற்றுத்தந்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு கிராம மக்கள் தமது நன்றியையும் தெரிவித்தனர்.

