தனமல்வில - உடவளவ சாலையில் உள்ள போடகம பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று(04.07.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மோட்டார் சைக்கிளும், லொறியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.இருவர் உயிரிழப்பு இதன்போது, ம…
தனமல்வில - உடவளவ சாலையில் உள்ள போடகம பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று(04.07.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மோட்டார் சைக்கிளும், லொறியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.இருவர் உயிரிழப்பு இதன்போது, மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் இருவரும் தனமல்வில பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, லொறியின் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

