வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join 2026 லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் 6-வது சீசனுக்கான போட்டி நடுவர்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த முறை நடுவர் குழுவில் சர்வதேச அளவில் பழ…
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
💬 Join
2026 லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் 6-வது சீசனுக்கான போட்டி நடுவர்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த முறை நடுவர் குழுவில் சர்வதேச அளவில் பழுத்த அனுபவமிக்க பல அதிகாரிகள் இணைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுள் ஐசிசி-யின் முதன்மைப் போட்டி நடுவரான ரஞ்சன் மடுகல்லே மற்றும் ஐசிசி-யின் முதன்மை நடுவரான குமார் தர்மசேன ஆகியோர் முதன்மையானவர்களாக இடம்பெற்றுள்ளனர்.
போட்டி நடுவர்கள் குழு (Match Referees)
சர்வதேச அனுபவமிக்க அதிகாரிகளுடன், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் வளர்ந்து வரும் போட்டி நடுவர்கள் குழுவைச் சேர்ந்தவர்களும் இதில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.ரஞ்சன் மடுகல்லேகிரேம் லெப்ராய் (Graeme Labrooy)வெண்டல் லெப்ரூய் (Wendell Labrooy)மனோஜ் மெந்திஸ்பிரதீப் ஜெயப்பிரகாஷ்
நடுவர்கள் குழு (Umpires)
குமார் தர்மசேனவுடன் இணைந்து உள்நாட்டு மற்றும் சர்வதேச மட்டத்திலான பல முக்கிய நடுவர்கள் இத்தொடரில் கடமையாற்றவுள்ளனர்:குமார் தர்மசேனவேய்ன் நைட்ஸ் (Wayne Knights)ஆசிஃப் யாகூப் (Asif Yaqoob)ரவீந்திர விமலசிறிபிரகீத் ரம்புக்வெல்லரவீந்திர கொட்டஹச்சிசாமர டி சொய்சாஅசங்க நாணாயக்காரசந்திரிக்கா அமரசிங்கஹேமந்த பொதேஜுசாந்த பொன்சேகாபி. ஆர். எல். துல்சிறி

